மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் வெடிபொருட்கள் மீட்பு

45 0

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ​​T-56 ரக தோட்டாக்கள் உட்பட பல்வேறு வகையான தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​குறித்த தோட்டாக்கள் மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, T-56 தோட்டாக்கள் உட்பட 715 பல்வேறு வகையான தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த இடத்தில் தோட்டாக்களை மறைத்து வைத்தது யார் என்பது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.