பஞ்சபூத சிகிச்சை கண்டுபிடிப்பாளர் வைத்தியர் ஆதி ஜோதி பாபுவை பாராட்டிய தொல். திருமாவளவன்

50 0

உலகம் முழுவதும் மக்கள் மாற்று மருத்துவம் குறித்த விழிப்புணர்வை அதிக அளவில் பெற்று வருகிறார்கள். அந்த வகையில் இந்த நூற்றாண்டில் தமிழர் ஒருவரால் கண்டறியப்பட்டிருக்கும் பஞ்சபூத சிகிச்சை எனும் மாற்று மருத்துவத்தை பற்றி அறிந்துகொண்டு, அதன் கண்டுபிடிப்பாளரான வைத்தியர் ஆதி ஜோதி பாபுவை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், இந்திய மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

மருந்தில்லா மருத்துவ சிகிச்சை முறையாக கருதப்படும் பஞ்சபூத மருத்துவ சிகிச்சையை தமிழக மாநகரான சேலத்தை சார்ந்த வைத்தியர் ஆதி ஜோதி பாபு கண்டுபிடித்தார். இதற்கான  செயல்முறை காப்புரிமை மற்றும் வடிவமைப்பு காப்புரிமையை இந்திய அரசாங்கம் இவருக்கு வழங்கி இருக்கிறது.

உலக சாதனை சங்கமும் இவருடைய மருத்துவ மருந்தில்லா மருத்துவ கண்டுபிடிப்பு தான் முதல் காப்புரிமை பெற்ற கண்டுபிடிப்பு என அங்கீகரித்து, சாதனை சான்றிதழையும், விருதுகளையும் வழங்கி கௌரவித்துள்ளது.

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினிடம் பாராட்டைப் பெற்ற வைத்தியர். ஆதி ஜோதி பாபுவை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், இந்திய மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவனும் சந்தித்து பாராட்டு தெரிவித்திருக்கிறார். இந்த சந்திப்பின் போது வைத்தியர் ஆதி ஜோதி பாபு எழுதிய மருத்துவ நூலை திருமாவளவனுக்கு வழங்கி கௌரவித்தார்.