மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

36 0

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் கொத்மலை ஓயாவில் இன்று (08) அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் உருகுலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியின் லிந்துலை பகுதியில் கொத்மலை ஓயாவில் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு பொது மக்களால் தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து, பொலிஸாரால் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நுவரெலியா நீதவான் சம்பவ இடத்திற்கு பிரவேசித்து பரிசோதித்த பின்னர், பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சிறப்பு தடயவியல் வைத்தியரிடம் சடலம் ஒப்படைக்கப்படும் என லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் அடையாளம் காணமுடியாத நிலையில் உருக்குலைந்து காணப்படுவதாக இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.