இந்தியாவின் இமாச்சல் பிரதேசம் பிலஸ்பூர் மாவட்டம் மொரோடன் பகுதியில் ஏற்பட்ட பெரும் மண்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஹரியானாவின் ரோஹ்தாலிலிருந்து குமர்வின் நோக்கி சுமார் 30 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்தின் மீது திடீரென மலைப்பகுதி சரிந்து விழுந்ததில், பேருந்து முழுவதும் மண்ணிலும் பாறைகளிலும் புதைந்து போயுள்ளது.
சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த மீட்புப் படையினர், சிக்கியுள்ளவர்களை மீட்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடுமையான மழை காரணமாக மீட்புப் பணிகள் சவாலாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

