‘மிதிகம ருவானின்” சகா உட்பட ஏழு பேர் ஹசிஸ் போதைப்பொருளுடன் கைது

47 0

பாதாள உலக கும்பலை சேர்ந்த  ‘மிதிகம ருவான்’ என்பவரின் சகா உட்பட ஏழு சந்தேக நபர்கள் ஞாயிற்றுக்கிழமை (06) ஹசிஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

ஹபராதுவ மற்றும் பத்தேகம பகுதிகளில் பொலிஸாரால் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே  சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட  போதைப்பொருட்களின் பெறுமதி  சுமார் 40 மில்லியன் ரூபாவாகும்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தென் மாகாணத்தின் பல பகுதிகளுக்கு போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுப்பட்டதாகவும், மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுதல் என்ற போர்வையில் போதைப்பொருள் கடத்தல் மோசடியிலும் ஈடுப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாதாள உலக கும்பலை சேர்ந்த  ‘மிதிகம ருவான்’ என்ற புனைப்பெயரில் அழைக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் பின்னரே இந்த ஏழு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென் மாகாணத்திற்குப் பொறுப்பான  பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.