தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல்-யேர்மனி ஸ்ருட்காட்.

254 0

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கேணல் சங்கர் அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவேந்தலும் 05.10.2025  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு யேர்மனி ஸ்ருட்காட் நகரில் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் ஸ்ருட்காட் மற்றும் அதன் அயல் நகரங்களில் உள்ள தமிழ் மக்கள் கலந்துகொண்டு தீபம் ஏற்றி மலர் தூவி தமது வீர வணக்கத்தைச் செலுத்தினர். பின்பு கவிதைகள் பேச்சுக்கள். ஆகியவற்றுடன் நடனாஞ்சலியும், இசை வணக்கமும் இடம்பெற்றது. நிறைவாக தேசியக்கொடி கையேற்புடன் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற எழுச்சிப் பாடலுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.