குப்பை மேட்டிலிருந்து துப்பாக்கி மீட்பு

45 0

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் ரக துப்பாக்கி ஒன்று மாதம்பிட்டிய குப்பை மேட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி துருப்பிடித்த நிறத்தில் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அந்தப் பகுதியை கடந்து சென்ற ஒருவர், களனி பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த துப்பாக்கி மீட்கப்பட்டது.

அந்த இடத்தில் துப்பாக்கியை யாரோ வீசிச் சென்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.