கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சட்டவிரோதமாக கொண்டு வந்த வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று திங்கட்கிழமை (06) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் துபாயில் மூன்றரை ஆண்டுகள் மின்னியலாளராக பணியாற்றி வந்த கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இன்று 05.20 மணிக்கு ஃபிட்ஸ் ஏர் விமானம் 8D. – 822 இல் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார்.
சந்தேகநபர் கொண்டுவந்த பயணப்பையில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் சுமார் 1.35 மில்லியன் ரூபா மதிப்புடைய 9,000 “பிளாட்டினம்” சிகரெட்டுகள் அடங்கிய 45 கார்டூன்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளுடன் சந்தேகநபரை எதிர்வரும் 08 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மேலதிக விசாரணைக்காக ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

