தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்க்காக தனது உயிரை ஈகம் செய்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் பேர்லின் நகரின் Rathaus Neukölln நகர மன்றத்தின் வளாகத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இத் தருணத்தில் தமிழீழ வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அவர்களின் நினைவுப்பதிவுகளுடனும் சுடர் ஏற்றப்பட்டு மலர் மற்றும் அகவணக்கம் முன்னெடுக்கப்பட்டது.
அகவணக்கத்தைத் தொடர்ந்து தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுரைகள் யேர்மன் மொழியில் வாசிக்கப்பட்டது. நிறைவாக தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.
சனிக்கிழமை அன்று பேர்லின் தமிழாலயத்திலும் தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு மாணவசமூகத்தினரால் அகவணக்கம் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.





























