குருணாகலை – மெல்சிரிபுரவின் பன்சியாகமவில் அமைந்துள்ள பௌத்த வன ஆசிரமமான நா உயன ஆரண்ய சேனாசனத்தில் இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் உயிரிழந்த பிக்குகளின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் இருவர் வெளிநாட்டு பிரஜைகள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களின் உடல்கள் கொகருல்ல மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. ஏனைய பிக்குகளின் உடல்கள் குருணாகலை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
விபத்து இடம்பெற்ற வேளையில் 13 பிக்குகள் கேபிள் காரில் இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
படுகாயமடைந்த பிக்குகள் தற்போது குருணாகலை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

