யாழ்ப்பாணத்தில் பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் புதன்கிழமை (24) கோண்டாவில் பகுதியில் இரண்டு வாள்களும் ஒரு கை குண்டும் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அவரை புதன்கிழமை (24) யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முற்படுத்திய யாழ். பெருங்குற்றத்தடுப்பு பொலிசார், அவரை இரண்டு நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி கோரியிருந்தனர். பொலிஸார் கோரிக்கைக்கு நீதிமன்றமும் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

