இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு தங்காலையிலுள்ள கால்டன் இல்லத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்றுள்ளது.
இதன் போது உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கிடையில் இரு தரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் மற்றும் இலங்கையில் அரசியல் முன்னேற்றங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு – விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, தங்காலை கால்டன் இல்லத்தில் தற்போது வசித்து வருகின்றார்.
மஹிந்த கொழும்பிலிருந்து வெளியேற முன்னர் சீன தூதுவரை சந்தித்திருந்தார். இவ்வாறு முக்கிய இராஜதந்திரிகள் முன்னாள் ஜனாதிபதிகளை சந்தித்து வரும் நிலையில், இந்திய உயர்ஸ்தானிகரும் மஹிந்தவை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

