கொழும்பை பரபரப்பான நகரமாக மாற்றுவதே நோக்கம்

50 0

சுற்றுலா பயணிகளுக்காக கொழும்பை 72 மணி நேரமும் பரபரப்பான, இடமாக மாற்றத் திட்டமிட்டுள்ளதாக, கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கெலி பல்தசார்  சீனாவின் குவான்சோவில் நடைபெற்ற பட்டுப்பாதை நகரங்களின் சர்வதேச சுற்றுலா கூட்டமைப்பின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

சீனாவைச் சேர்ந்தவரல்லாத மற்றும் பார்வையாளராக குறித்த பொதுக்கூட்டத்தில் பேசிய கொழும்பு மேயர் வ்ராய் கெலி பல்தசார்,

சுற்றுலா, கலாசாரம் மற்றும் பரந்த முயற்சிகள் மூலம் தொடர்புகளை வளர்க்கும் நவீன பட்டுப்பாதையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார்.

உட்கட்டமைப்பு மேம்பாடுகள், பாரம்பரிய வழிகாட்டுதல்களை செயல்படுத்துதல் மற்றும் பார்வையாளர் அனுபவத்தை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட பல்வேறு கலாசார மற்றும் பொழுதுபோக்கு திட்டங்கள் உள்ளிட்ட சுற்றுலாவிற்கான கொழும்பின் தொலைநோக்குப் பார்வையை அவர் கோடிட்டுக் காட்டினார் என கொழும்பு நகர நபை  அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

மேயர் பால்தசார், எம்.எம்.சி முகமது ஜாஃபர் மற்றும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் பிரதிநிதிகளுடன் கலந்து கொண்டு, சர்வதேச சுற்றுலா ஈடுபாட்டிற்கு இலங்கை எடுத்து வரும் கூட்டு அணுகுமுறையை வலியுறுத்தியுள்ளார்.

மற்றைய பட்டுப்பாதை நகரங்களுடனான உறவுகளை ஆழப்படுத்துவதற்கும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் சமூகங்கள் இருவருக்கும் பயனளிக்கும் உறுதியான செயல்களாக பகிரப்பட்ட கருத்துக்களை மாற்றுவதற்கும் கொழும்பின் உறுதிப்பாட்டை மேயர் வெளிப்படுத்தியுள்ளார்.