மசாஜ் நிலையம் என்ற போர்வையில் ஐஸ் விற்பனை ; இருவர் கைது!

67 0

கண்டி – ராஜசிங்க மாவத்தை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் உட்பட இருவர் கண்டி பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 05 கிராம் ஐஸ் போதைப்பொருளும் ஆணிடமிருந்து 10 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

துபாயில் உள்ள ”இஷார” என்ற போதைப்பொருள் கடத்தல்காரரின் தலைமையில் சந்தேக நபர்கள் இருவரும் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரான பெண், மசாஜ் நிலையத்திற்கு வருபவர்களிடம் ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.