ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஐந்தாண்டு மூலோபாயத் திட்டம்

45 0

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது வணிக துறையின் பங்குதாரர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைத்து ஐந்தாண்டு மூலோபாயத் திட்டம் ஒன்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது, கப்பல் மேலாண்மையை மேம்படுத்துதல், வருவாய் வளர்ச்சியை ஊக்குவித்தல், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துதல், திறமை மேம்பாடு, நிலைத்தன்மையை மேம்படுத்துதல், செலவு சீரமைப்பு மற்றும் கடனை மறுசீரமைத்தல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது.

உலகளாவிய ரீதியில் இன்ஜின், இயந்திரங்கள்  மற்றும் உதிரிப்பாகங்களின் பற்றாக்குறை இருந்தபோதிலும்,  ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது 2024 ஆம் ஆண்டில் தங்களது சேவைகளை  69 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக மேம்படுத்தியுள்ளது.

இஞ்சின் கிடைக்காத காரணத்தினால் நீண்ட காலமாக இயங்காமல் இருந்த இரண்டு விமானங்கள் இப்போது சேவைக்கு திரும்பியுள்ளன. மூன்றாவது விமானம் அடுத்த ஆண்டு முதல் சேவைக்கு திரும்பவுள்ளத.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது கடந்த ஆண்டில் தனது வலையமைப்பை சீரமைத்தல்,  டிஜிட்டல் விற்பனை தளங்களை சீரமைத்தல், வருவாய் வளர்ச்சிக்கு வழிவகுத்தலில் அதிக கவனம் செலுத்தியது.

2025/26 நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வருவாய் 10 சதவீதமாக அதிகரித்தது மற்றும் பயணிகள் எண்ணிக்கை 22 சதவீதமாக உயர்வடைந்தது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளின் சௌகரியத்திற்காகவும் பொழுதுபோக்கிற்காகவும்  பல செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுது.

இந்த முயற்சிகள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு பங்களித்துள்ளன.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின்  ஐந்தாண்டு மூலோபாயத் திட்டம் விமான நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது கடன் மறுசீரமைப்பு,  உலகளாவிய நிலைத்தன்மை நடைமுறைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் எதிர்கால பயணிகளுக்கான தடையற்ற அனுபவங்களை வழங்க தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்வது ஆகியவற்றின் மூலம் நிதி ஸ்திரத்தன்மையை அடைவதில் கவனம் செலுத்தும்.