நவகமுவ செல்லும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு

44 0

நவகமுவ பொலிஸ் பிரிவிலுள்ள போமிரிய ஸ்ரீ வித்யாலோக பிரிவேனா மகா விஹாரையின் பெரஹெர செப்டம்பர் 21 முதல் 25 வரை நடைபெறுகிறது.

 

அதன்படி, பெரஹெர செப்டம்பர் 25 அன்று மாலை 7:00 மணி முதல் வீதி வலம் வரவுள்ளது.

 

இது விஹாரையில் இருந்து ஆரம்பித்து, யாகால சந்தி வழியாக வீதி இலக்கம் 697 ஊடாகச் சென்று, கொரதொட விஹாரைக்கு அருகிலுள்ள வெலிஹிந்த வீதி வழியாக மீண்டும் யாகால வீதி மற்றும் தஹம் பாசல் மாவத்தை ஊடாக விஹாரையை வந்தடையும்.

 

இதன் காரணமாக, குறித்த வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

மாற்று வழிகள்:

 

கடுவெல வெலே சந்தியிலிருந்து அதுருகிரியவுக்கு செல்லும் வாகனங்கள்: 

 

வீதி இலக்கம் 697 வழியாகச் செல்லும் வாகனங்கள், தொரதொட சந்தியில் தெற்கு நோக்கித் திரும்பி, எம்.டி.எச். ஜயவர்தன மாவத்தை வழியாக அதுருகிரியவை அடையலாம்.

 

அதுருகிரியவிலிருந்து கடுவெல நோக்கிச் செல்லும் வாகனங்கள்: 

 

வீதி இலக்கம் 697 வழியாகச் செல்லும் வாகனங்கள், ஒருவல சந்தியில் வலதுபுறம் திரும்பி நவகமுவ நோக்கிச் செல்லலாம். இலகுரக வாகனங்கள் வந்துராமுல்ல வீதி மற்றும் சுமனதிஸ்ஸ மாவத்தை வழியாக நவகமுவவை அடைந்து, கடுவெல மற்றும் ஹங்வெல்ல நோக்கிச் செல்லலாம்.