தெற்கு அதிவேக வீதியில் விபத்து

60 0

தெற்கு அதிவேக வீதியின் தொடாங்கொடைக்கும் களனிகமவுக்கும் இடையிலான பகுதியில் இன்று (22) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காலியில் இருந்து கொழும்புக்கு நோக்கி புத்தகங்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் தெற்கு அதிவேக வீதியின் கொழும்புக்கான ஒரு மருங்கின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக, தெற்கு அதிவேக வீதியின் தொடங்கொட மற்றும் கலனிகம இடையே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.