இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களும் முன்னெடுத்து வரும் சட்டப் படி வேலை செய்யும் போராட்டத்தை எதிர்வரும் புதன்கிழமை வரை தொடர முடிவு செய்துள்ளன.
இலங்கை மின்சார சபை சுதந்திர ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரபாத் பிரியந்த இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்தார்.
தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கப் பெறாவிட்டால் எதிர்வரும் 24 ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பான அறிவிப்பை வௌியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பா அல்லது தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லப்படுமா என்ற தீர்மானத்தை அன்றைய தினம் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

