தங்காலை பகுதியில் இன்று (22) மூன்று லொறிகளில் இருந்து பெருந்தொகையான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அதற்கமைய, 245 கிலோகிராம் ஹெரோயின், 380 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் 5 கைத் துப்பாக்கிகளும், ஒரு T-56 ரக துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தங்காலை சீனிமோதர பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் இன்று (22) கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தப் பகுதியில் புனரமைக்கப்பட்டு வந்த ஒரு பழைய வீட்டில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
குறித்த வீட்டுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த லொறிகளிலேயே இந்த போதைப்பொருள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

