விடுதியின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு!

53 0

கட்டான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கந்தவல பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மஸ்கெலியா, மவுஸ்ஸாகலை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இந்த இளைஞன் விடுதியின்  நீச்சல் தடாகத்தில் நண்பர்களுடன் உல்லாசமாக இருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கட்டான  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.