அம்பாந்தோட்டையில் தங்காலை – சீனிமோதர பகுதியில் புனரமைக்கப்பட்டு வரும் பழைய வீடொன்றில் இருந்து இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டிற்கு அருகில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் லொரி ஒன்றில் இருந்து ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 10 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த வீட்டில் இருந்த மற்றுமொரு நபர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தங்காலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

