சிறுவர்களுக்கு பொய் மற்றும் வஞ்சனையை கற்பிப்பது கவலைக்குரியது – திம்புல் கும்புறே விமலரத்ன தேரர்

63 0

எமது நாட்டில் சிறுவயது முதல் ஒரு சில குழந்தைகளுக்கு   பொய், வஞ்சனை  போன்ற துற்குணங்களை கற்பிக்கும் பெற்றேர்களும் உள்ளனர். பாடசாலைக்கு சேர்க்கும் போதே போலியான விடயங்களை சொல்லிக் கொடுக்கின்றனர். இது மிகவும் கவலைக்குறுய விடயமாகும் என்று மல்வத்தை பீடத்தின் அணுநாயக்கத் தேரர்  வண. திம்புல் கும்புறே விமலரத்ன தெரவித்தார்.

கண்டி அஸ்கிரிய சந்தானந்த பௌத்த கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

கண்டி நகரப்பாடசாலைகளில் அதிகமாக வெளி இடங்களில் இருந்து வரும் மாணவர்களே கல்வி கற்கின்றனர். அவர்களது பெற்றோர் சிறு வயது முதல் தமது குழந்தைகளுக்கு தவறான தரவுகளைக் கற்பித்து அவர்களது பதிவு பற்றிய விபரங்களில் பொய் உரைத்து அதனை தமது குழந்தைகளுக்கும் கற்பிக்கின்றனர்.

போலி ஆவணங்களை தயார் செய்து பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்கின்றனர். இதன் காரணமாக சில மாணவர்களது கல்வியின் ஆரம்பமே பொய்யுடன் கலந்து விடுகிறது.

இது போன்ற பல விடயங்களில் சிறுவயது முதலே பொய் உரைக்கும் வழியைப் பிள்ளைகளுக்கு பெற்றோரே காட்டிக் கொடுக்கி்னறனர். இது கலைக்குறிய விடயமாகும் என்றார்.