தியாக தீபத்திற்கு எம்.ஏ சுமந்திரன் அஞ்சலி

59 0

நல்லூர் பின் வீதியில் தியாக தீபத்தின் நினைவிடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பகத்திற்கு நேரில் சென்ற தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் அங்கிருந்த தியாக தீபத்தின் திருவுருவ சிலைக்கு அஞ்சலி செலுத்தி ஆவண காப்பகத்தினை பார்வையிட்டார்.

தியாக தீபத்தின் நினைவுகளை தாங்கிய ஆவண காப்பகம்  சனிக்கிழமை (20) மாலை திறந்து வைக்கப்பட்ட நிலையில் , ஆவண காப்பகத்திற்கு சென்று தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.