கரந்தெனிய பிரதேச சபையின் தலைவர் காலமானார்

49 0

கரந்தெனிய பிரதேச சபையின் தலைவர் மஹில் முனசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை (21) திடீரென சுகவீனமடைந்து காலமானார்.

இன்றைய தினம் காலை உடல் நலப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவர் நோய்வாய்ப்பட்டு கரந்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

47 வயதான முனசிங்க, கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்டு பிரதேச சபைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டவர் ஆவார்.

இவர் உயிரிழந்தமைக்கு மாரடைப்பு காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.