டேன் பிரியசாத் படுகொலை ; பிரதான துப்பாக்கிதாரி உட்பட மூவரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி!

50 0

டேன் பிரியசாத் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பிரதான துப்பாக்கிதாரி உட்பட மூவரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய கேகாலை நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை (19) அனுமதி வழங்கியுள்ளார்.

டேன் பிரியசாத் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி உட்பட மூவர் கேகாலை – ரன்வல பிரதேசத்தில் உள்ள வாடகை வீட்டில் வைத்து கேகாலை பொலிஸாரால் நேற்று  கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் காயப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 12400 சட்டவிரோத வெளிநாட்டு சிகரட்டுகள், போதைப்பொருள் மற்றும் 5 கஜமுத்துக்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கேகாலை மற்றும் வெலிஓயா ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 55 முதல் 39 வயதுக்குட்பட்ட இரண்டு ஆண்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மூவரும் கேகாலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பிரதான துப்பாக்கிதாரி மற்றும் பெண்ணை 7 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்யவும் மற்றைய நபரை சனிக்கிழமை (20) வரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்யவும் கேகாலை நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

கொழும்பு வெல்லம்பிட்டி பிரதேசத்தில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வைத்து கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.