இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தலைமையகத்தில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான மோசடிகளை விசாரணை செய்ய 16 பொலிஸ் அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வுப் பிரிவு வியாழக்கிழமை (18) நியமிக்கப்பட்டுள்ளது.
அண்மைய காலமாக அதிகரித்து வரும் முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு புலனாய்வுப் பிரிவு நியமிக்கப்பட்டுள்ளதாகவெளிநாட்டலுவல்கள் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் இருந்து மக்களைப் பாதுகாத்தல் மற்றும் அதற்கு முறையான தீர்வினை பெற்றுக்கொடுத்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இந்த சிறப்பு புலனாய்வுப் பிரிவு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டலுவல்கள் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையின் ஒழுங்குமுறையை வலுப்படுத்த, தேவைப்பட்டால், தற்போதுள்ள சட்டத்தைத் திருத்துவது அல்லது புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

