ஜப்பானில் இடம்பெறும் உலக தடகள செம்பியன்ஷிப்பில் இன்று (18) நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் பங்கேற்ற இலங்கையின் ருமேஷ் தரங்க, 7வது இடத்தைப் பிடித்தார்.
இதன்போது ருமேஷ் 84.38 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்திருந்தார்.
இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இரண்டு ஒலிம்பிக் செம்பியன்களான இந்தியாவின் நீரஜ் சோப்ரா மற்றும் பாகிஸ்தானின் அர்ஷத் நதீமை, ருமேஷ் தரங்க முந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

