கடந்த செப்டம்பர் 14 ஆம் திகதி நடந்த இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது இடம்பெற்ற விதிமீறல் தொடர்பில் விசாரணை செய்ய சர்வதேச கிரிக்கெட் பேரவை இணங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதிகளை மீறியமை தொடர்பில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்தியா, பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்க மறுத்தமையை போட்டி நடுவர் எதிர்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு எண்டி பைகிராப்ட் மீது முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த சம்பவத்திற்கு அன்றைய போட்டியின் நடுவராக இருந்த எண்டி பைகிராப்ட் மன்னிப்பு கோரியுள்ளார்.
தவறான தகவல் தொடர்பு காரணமாக நடந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபையிடமும், அணித் தலைவரிடமும் அவர் மன்னிப்பு கோரிய நிலையில் இன்றைய (17) ஐக்கிய அரபு இராச்சியம் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் அணி மைதானத்திற்கு வந்தது.
அதன்பின்னர் நாணய சுழற்சி இடம்பெற்றிருந்த நிலையில், ஐக்கிய அரபு இராச்சியம் அதில் வென்ற நிலையில் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

