சமத்துவமான நாடொன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் ! -ஹர்ஷன நாணயக்கார

53 0

சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதன் மூலம் அனைவருக்கும்  சமத்துவமான நாடொன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

சிறைக் கைதிகளுக்காக வசதிகளை மேற்கொண்டு, சிறைக்கைதிகளுக்கான கைதிகள் நலநோன்பு சங்கத்தினால்  மேற்கொள்ளப்படுகின்ற சேவைகள் பாராட்டத்தக்கதாகும்.

சிறைக்கைதிகளுக்கு  வசதிகளை மேற்கொள்ளும்போது கைதிகள் நலனோள்பு சங்கம் வழங்குகின்ற ஒத்துழைப்பு பெரும் சக்தியாகும். தற்போது சிறைச்சாலைகளில் பாரிய நெருக்கடி இருந்து வருகிறது.  இந்த நெருக்கடியைை குறைத்து, தேவையான வசதிகளை வழங்குவது எமது பொறுப்பாகும்.

நபர்கள் சிறைச்சாலைகளுக்கு செல்வதை குறைப்பதே எமது நோக்கமாகமாக இருக்க வேண்டும்.  வறுமை காரணமாக சிறைக்கு செல்லும் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

நாட்டின் சமூக நீதியின் மூலம் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தி, சிறைக்கு செல்லும் எண்ணிக்கையை குறைப்பதே ஆளும் அரசாங்கத்தின் நோக்கமாகும்.

சிறைப்படுத்தப்படும் அனைவரது மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது  மிகவும்  முக்கியமாகும். சட்டத்துக்கு முன்னால்  அனைவரும் சமமானவர்கள். அரசாங்கம் என்றவகையில், சட்டத்தின் ஆட்சியை பாதுகாத்துக்கொண்டு, அனைவருக்கும்  சமத்துவமான நாடொன்றை உருவாக்குவோம்  என்றார்.