ராகமையில் வர்த்தக நிலையத்தில் திருட்டு ; சந்தேக நபர் கைது !

52 0

ராகமையில் உள்ள வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்து 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளை திருடிய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் மேல் மாகாண வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று வெள்ளிக்கழிமை (12) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த திருட்டு சம்பவம் 04.09.2025ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது.

ராகமை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மஹரகம பகுதியை சேர்ந்த, 30 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடமிருந்து 23 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  மேல் மாகாண வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகிறது.