லக்மாலி ஹேமசந்திரவிடம் மன்னிப்பு கோரினேன்!-பிரசாத் சிறிவர்தன

37 0

பாராளுமன்ற பெண் பிரதிநிதிகளையோ அல்லது பெண்களையோ அவமதிக்கும் நோக்கம் எனக்கு கிடையாது. இவ்விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமசந்திரவிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோரியுள்ளேன். இதனை அரசியலாக்க வேண்டாம் என்று பிரதமரிடம் கேட்டுக்கொள்கிறேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) நடைபெற்ற அமர்வின்போது ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பிரதமர் எனது பெயரை குறிப்பிட்டு சபையில் உரையாற்றியிருந்தார். ஆளும் தரப்பின் உறுப்பினர் லக்மாலி ஹேமசந்திரவையோ அல்லது பெண்களையோ அவமதிக்கும் நோக்கம் எனக்கு கிடையது.நேற்று உரையாற்றிக் கொண்டிருக்கையில் ஏற்பட்ட தர்க்கத்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டது.

எனது உரைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமசந்திர இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டார். அவரது செயற்பாட்டை நான் சுட்டிக்காட்டினேன். எனது கருத்துக்களினால் அவருக்கு அசௌகரியம் ஏற்பட்டதாக பின்னர் குறிப்பிடப்பட்டது. ஆகவே நான் அவரிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோரினேன்.

பெண்களை அவமதிக்கும் நோக்கம் எனக்கு கிடையாது. நேற்று சபையில் ஏற்பட்ட தர்க்கம் அன்றுடமே முடிவடைந்துவிட்டது. நான் அதனை பெரிதுப்படுத்தவில்லை. ஆகவே இந்த விடயத்தை அரசியலாக்கக் கூடாது என்று பிரதமரிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.