பலஸ்தீனில் இடம்பெறும் அநியாயங்களை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் – பிரதி அமைச்சர் முனீர் முழப்பர்

47 0

பலஸ்தீனில் இடம்பெறும் அநியாயங்கள் தொடர்பில், மனிதர்கள் என்வகையில் அவர்கள் எந்த மதத்தை பிற்பற்றினாலும் எந்த கொள்கையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அதனை அனுமதிக்கமாட்டார்கள். அரசாங்கம் என்றவகையில் அந்த விடயங்களை அங்கு இடம்பெறும் விடயங்களை ஒருபோதும் அனுமதிப்பதில்லை என பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்ற இலங்கை குடியரசுக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான முதலீடுகள், பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

பலஸ்தீனில் இடம்பெறும் அநியாயங்கள் தொடர்பில் கவலைப்பட மனிதர்களாக இருந்தால்போதும் என நம்புகிறேன். புதிதாக எதனையும் தெரிந்துகொள்ள தேவையில்லை. அங்கு இடம்பெறும் மனிதாபிமானமற்ற விடயங்களை ஊடகங்கள் ஊடாக தெரிந்துகொள்ள முடியுமாகிறது. அங்கு இடம்பெறும் விடயங்கள், குழந்தைகள் எதிர்கொள்ளும் நிலைமைகள் தொடர்பில் இதயம் உள்ள யாருக்கும் பாரிய கவலையே ஏற்படுகிறது. மனிதாமானம் இல்லாத இருதயம் இல்லாதவர்களுக்கு அங்கு இடமபெறும் விடயங்கள் தொடர்பில் கலை ஏற்படாமல் இருக்க முடியும்.

அதனால் பலஸ்தீனில் இடம்பெறும் அநியாயங்கள் அட்டூழியங்கள் தொடர்பில், மனிதர்கள் என்வகையில் அவர்கள் எந்த மதத்தை பிற்பற்றினாலும் எந்த கொள்கையை பின்பற்றக்கூடியவர்களாக இருந்தாலும் அதனை அனுமதிக்கமாட்டார்கள். குறிப்பாக அரசாங்கம் என்றவகையில் அந்த விடயங்களை ஒருபோதும் அனுமதிப்பதில்லை.

பலஸ்திினில் இடம்பெறும் மிலேச்சத்தனம் உலக நாடுகளால் இன்று நிராகரிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் இந்த விடயங்களை அடிப்படையாக்கொண்டு நாங்கள் அரசியல் செய்ய முற்படுவதும் இல்லை என்ற விடயத்தையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.

எனவே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தேசம் என்றவகையில், அதன் மாேசமான நிலைமை தொடர்பில் எங்களுக்கு நல்ல அனுபவம் இருக்கிறது. அதனால் பலஸ்தீனியர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலை உலகில் யாருக்கும் ஏற்படக்கூடாது என்பதே எமது பிராத்தனையாக இருக்க வேண்டும். அதற்காக உலக நாடுகளுடன் எங்களுக்கு இணைந்து செயற்பட முடியுமாக இருந்தால், நாங்கள் அதற்காக செயற்பட வேண்டும்.

இதேவேளை, மத்திய கிழக்கு நாடுகளுடன் எமது நாடு ஒப்பந்தங்களை செய்யும்போது, அங்கு மறைமுக நோக்கங்கள் இருக்கவில்லை. அவர்கள் எப்போதும் எமது நாட்டுக்கு பல்வேறு வகையில் உதவி செய்ய நாடுகளாகும். குறிப்பாக கடந்த காலங்களில் ஐக்கிய அரபு இராச்சிய முதலீட்டாளர்கள் எமது நாட்டில் முதலீடுகளை மேற்கொண்டு செயற்படும்போது, சில ஊடகங்கள் அந்த முதலீட்டாளர்கள் தொடர்பில் பாெய் பிரசாரங்களை மேற்கொண்டு, இந்த நாட்டில் இருந்து அவர்களை வெளியேற்றினார்கள்.

2017வரை ஐக்கிய அரபு இராச்சியத்தால் எங்களுக்கு நேரடி முதலீடுகள் வந்திருக்கின்றன. இறுதி 3 வருடங்களில் மாத்திரம் அவர்கள் எமது நாட்டில் 3200 வீட்டுத்திட்டங்களை அமைத்திருக்கின்றனர். அதேபோன்று 1100 வீடுகளை மறுசீரமைப்பு செய்திருக்கின்றனர். மேலும் எமது பல்கலைக்கழங்கள மாணவர்களுக்கு 5 விடுதிகளை அமைத்து தந்துள்ளார்கள். சுகாதார மத்திய நிலையங்கள் அமைத்து தந்துள்ளார்கள். பாடசாலை கட்டிடங்களை நன்கொடையாக வழங்கி இரு்க்கிறார்கள்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளாக வந்தவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளமை தொடர்பில் நாங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். எமது நாட்டில் ஏற்பட்ட சில விடயங்கள் காரணமாகவே ஐக்கிய அரபு இராச்சிய முதலீட்டாளர்கள் பலர் நாட்டை விட்டு சென்றளர். அந்த நிலையை மாற்றியமைத்து, அந்த முதலீட்டாளர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவர முடியுமான நிலைமையை ஏற்படுத்தவே அரசாங்கம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.