இலங்கை – UAE ஒப்பந்தம் குறித்த யோசனை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

59 0

இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் குறித்த யோசனை இன்று (09) பாராளுமன்றத்தில் 163 பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.

இதற்கமைய விசேட பெரும்பான்மையுடன் அந்த யோசனை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.

யோசனைக்கு எதிராக எந்த வாக்குகளும் அளிக்கப்படவில்லை என்பதுடன், யாரும் வாக்களிப்பிலிருந்து விலகியிருக்கவும் இல்லை.