பவுசர் சாரதி ஐஸ் போதைப்பொருளுடன் கைது

49 0

போதையில் எரிபொருள் தாங்கி வாகனத்தை செலுத்தி சென்ற சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது உடமையில் இருந்து ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் சங்குபிட்டி பாலத்தை அண்மித்த பகுதியில், பொலிஸார் இன்றைய தினம் திங்கட்கிழமை மேற்கொண்ட வீதிச்சோதனை நடவடிக்கையின் போது, போதையில் எரிபொருள் தாங்கியை செலுத்தி சென்ற சாரதியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சாரதியை சோதனையிட்ட போது , அவரது உடமையில் இருந்து,  ஐஸ் போதைப்பொருளையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சாரதியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையில், சாரதி ஜஸ் மற்றும் கஞ்சா பயன்படுத்திய நிலையில் வாகனத்தை செலுத்தியமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.