சர்வதேச இயன்முறை மருத்துவ தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை (8) மானிப்பாயில் நடைபவனி முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேச இயன்முறை மருத்துவ தினத்தை முன்னிட்டு உலகளாவிய ரீதியில் பல்வேறு விதமான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மானிப்பாய் வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இந்த நடைபவனி இடம்பெற்றது.
இந்த நடைபவனியில் கிறீன் வைத்தியசாலை நிர்வாகத்தினர், வைத்தியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவினர் கலந்துகொண்டனர்.




