குருணாகலில் கும்புக்கெடே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹெட்டிகம பிரதேசத்தில் கிம்புல்வான ஆற்றில் மிதந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கும்புக்கெடே பொலிஸார் தெரிவித்தனர்.
கும்புக்கெடே , ஹெட்டிகம பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதுடைய முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் நீரில் மூழ்கி உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பில் கும்புக்கெடே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

