தேசிய மக்கள் சக்தி அமைச்சர்கள் சிலர் முன்னிலை சோசலிச கட்சி செயற்பாட்டாளர்களை தாக்கிய செயலை வன்மையாக கண்டிக்கிறோம்!

54 0

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் சட்டத்தையும் அதிகாரத்தையும் கையில் எடுத்துக்கொண்டு முன்னிலை சோசலிச கட்சி செயற்பாட்டாளர்களை தாக்கிய ஜனநாயக விரோத செயலை வன்மையாக கண்டிக்கிறோம் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

குறிப்பிட்ட காலத்தில் இருந்து முன்னிலை சோசலி கட்சியின் காரியாலயமாக முன்னெடுத்துச்செல்லப்பட்ட கம்பஹா யக்கல அலுவலகம், அதன் உறுப்பினர்களின் அரசியல் பிளவுடன் வெளிப்பட்டிருந்த இந்த காரியாலயத்தின் சட்ட ரீதியிலான உரிமை தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பொன்றின் மூலம் மக்கள் விடுதலை முன்னணிக்குரியது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இருக்கையில், சட்டத்தின் உரிமையை தங்களின் கைகளில் எடுத்துக்கொண்டு பலவந்தமான அதிகாரமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரினால், கடந்த வாரம் குண்டர்களின் அதிகாரத்தை பயன்படுத்திக்கொண்டு, அந்த காரியாலயத்தில் தங்கிருந்த முன்னிலை சோசலிச கட்சி செயற்பாட்டாளர்களை தாக்கி, அவர்களை விரட்டியடித்து, அந்த நிலையத்தை மக்கள் விடுதலை முன்னணியின் சிலர் கைப்பற்றிய முறை, முற்றாக சட்டத்துக்கு முரணான, ஜனநாயக விராேத, மேலாதிக்கமாக அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளதாகவே காண்கிறோம்.

இந்த ஜனநாயக விரோத செயற்பாடை நாங்கள் முற்றாக கண்டிக்கிறோம். இது அரச அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்திக்கொண்டு மேற்கொண்டிருக்கும் தன்னிச்சையான செயற்பாடாகவே பார்க்கிறோம்.

நீதிமன்றத்தினால் வழங்கப்படுகின்ற தீர்ப்பொன்றை செயற்படுத்தும்போது அதற்கு சட்ட ரீதியிலான செயல் முறையொன்று இருக்கிறது என்பதை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதானிகள் தெரியாமல் இருக்க முடியாது. அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு, நீதிமன்ற உத்தரவை கண்டுகொள்ளாது தன்னிச்சையாக செயற்பட்டிருப்பதாகவே மக்களுக்கு இதன் மூலம் தெளிவாகிறது.

அதனால் உடனடியாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் இதுதொடர்பான பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஜனநாயக விராதமாக செயற்பட்ட அரசியல் பிரபலங்களுக்கு எதிராக, அரசியல் ரீதியாகவே தண்டை வழங்கி, நாட்டில் இருக்கும் ஜனாநாயகத்துக்கும் சட்டத்துக்கும் சார்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது என்பதை மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அத்துடன் இந்த பிழையான நடவடிக்கையை உடனடியாக சரி செய்வதற்கு அரசாங்கத்தின் அரசியல் தலைவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவத்துக்கொள்கிறோம். தேசிய மக்கள் சக்தியின் தாக்குதல் தொடர்பில் சட்டம் செயற்படுத்தப்படுகிறதா என மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.