மாத்தளையில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு!

44 0

மாத்தளையில் ஹதுன்கமுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லேடியங்கல பகுதியில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹதுன்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (04) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் வில்கமுவ பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஆவார்.

இவர் தனது வயலுக்கு சென்றிருந்த போது காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக ஹதுன்கமுவ  பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.