ஓய்வு பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் காணாமல்போன சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை – அகலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய ஓய்வு பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே காணாமல்போயுள்ளார்.
இவர் ஆகஸ்ட் 29 ஆம் திகதி சிகிச்சைக்காக கண்டி பிரதேசத்தில் உள்ள சுகாதார மத்திய நிலையத்திற்கு சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை என அவரது மனைவி மத்துகம பொலிஸ் நிலையத்தில் செப்டெம்பர் 02 ஆம் திகதி முறைப்பாடு அளித்துள்ளார்.
இது தொடர்பில் மத்துகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

