பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான ரவி செனவிரத்னவுக்கு எதிராக கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (4) இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தது.
2023 ஆம் ஆண்டு மதுபோதையில் வாகனம் ஓட்டி வீதி விபத்தைத் தடுக்கத் தவறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் ரவி செனவிரத்னவிற்கு எதிராக இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றது.
அதன்படி, கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக இடம்பெற்றுவரும் வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிடக் கோரி ரவி செனவிரத்ன தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கோபல்லவ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதியரசர்கள் அமர்வு முன் குறித்த மனு பரிசீலிக்கப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

