ஜேர்மனியில் தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் ஒரே கட்சியைச் சேர்ந்த ஆறு வேட்பாளர்கள் மரணம்

54 0

ஜேர்மனியில் உள்ளாட்சித் தேர்தல்கள் நெருங்கிவரும் நிலையில், ஒரே கட்சியைச் சேர்ந்த ஆறு வேட்பாளர்கள் மரணம் அடைந்துள்ளார்கள்.

ஒரே கட்சியைச் சேர்ந்த ஆறு வேட்பாளர்கள் மரணம்

ஜேர்மனியின் North Rhine-Westphalia மாகாணத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற உள்ளன.

ஜேர்மனியில் தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் ஒரே கட்சியைச் சேர்ந்த ஆறு வேட்பாளர்கள் மரணம் | 6 Candidates Dies Of Germany Afd Party Ahead Vote

இந்நிலையில், கடந்த சில வாரங்களில் வலதுசாரிக் கட்சியான AfD கட்சியைச் சேர்ந்த ஆறு வேட்பாளர்கள் மரணம் அடைந்துள்ளார்கள்.

பொலிசார், அவர்களுடைய மரணத்தில் சதி எதுவும் இருப்பதற்கான ஆதாரம் இல்லை என்று கூறியுள்ளார்கள்.

விடயம் என்னவென்றால், ஆறு வேட்பாளர்கள் மரணம் அடைந்துள்ளதால், வாக்குச்சீட்டுகளை புதிதாக அச்சடிக்கவேண்டிய நிலை உருவாகியுள்ளது.

 

அதேபோல, ஏற்கனவே தபால் வாக்குகளை மக்கள் அளிக்கத் துவங்கிவிட்டதால், ஆறு வேட்பாளர்கள் மரணம் அடைந்துள்ளதைத் தொடர்ந்து, அவர்கள் மீண்டும் வாக்களிக்கவேண்டியதாகியுள்ளது.

AfD கட்சிக்கு சமீப காலமாக மக்களிடையே ஆதரவு பெருகிவரும் நிலையில், அக்கட்சியைச் சார்ந்த ஆறு வேட்பாளர்கள் மரணம் அடைந்துள்ளதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் மக்கள் அது தொடர்பில் கேள்வி எழுப்பிவருகிறார்கள்.

ஆனால், மாகாண உள்துறை அமைச்சகம், AfD கட்சி வேட்பாளர்கள் மட்டும் மரணமடையவில்லை, மற்றக் கட்சி வேட்பாளர்களும் மரணமடைந்துள்ளார்கள் என்பதை சுட்டிக் காட்டியுள்ளது.