பசியால் கிணற்றில் விழுந்த யானை: பத்திரமாக மீட்டது வனத்துறை!

61 0

இந்தியாவின், கேரள மாநிலம் எர்ணாகுளம் அடுத்த கொத்தமங்கலத்தில் கடந்த 30ம் தேதி, காட்டு யானை ஒன்று உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.

நள்ளிரவு நேரம் ஒருவரின் வீட்டு வளவுக்குள் சென்ற அந்த யானை, அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்தது.

இதையடுத்து யானை எழுப்பிய சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்த அப்பகுதி மக்கள், இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு சென்ற வனத்துறையினர் கிணற்றின் ஒரு பகுதியை இடித்து சாய்வுப்பாதை அமைத்தால்தான், யானையை மீட்க முடியும் என தெரிவித்தனர்.

ஆனால், வீட்டின் உரிமையாளர் கிணற்றின் பக்கவாட்டு சுவரை இடிக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்திய வனத்துறையினரும், பொலிசாரும், யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர், சாய்வு பாதை அமைத்து, சுமார் 15 வயது மதிக்கத்தக்க அந்த யானையை பத்திரமாக மீட்டனர்.