உடபுஸ்ஸல்லாவ பகுதியில் உள்ள ஒரு பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர்கள் குழு, ஞாயிற்றுக்கிழமை (31) மதியம் சுற்றுலா சென்று போபுருதிய நீர்வீழ்ச்சியின் கீழ் நீரோடையில் நீந்திக் கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக அம்பகஸ்டோவ பொலிஸார் தெரிவித்தனர்.
போபுஸ்ஸல்லாவ டாலோஸ் கல்லூரியில் கணிதம் கற்பித்து வந்த கே. முகில்தரன் (32) என்ற ஆசிரியர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர் ஒரு குழந்தையின் தந்தை ஆவார்.
பாடசாலையைச் சேர்ந்த எட்டு ஆசிரியர்கள் அடங்கி குழு ஒன்று போபுருடிய நீர்வீழ்ச்சியைப் பார்வையிட ஞாயிற்றுக்கிழமை (31) சுற்றுலா சென்றிருந்தது. அவர்கள் போபுருதிய நீர்வீழ்ச்சியின் கீழ் நீரோடையில் நீந்தச் சென்றிருந்தபோது, ஆசிரியர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா பொலிஸின் உயிர்காக்கும் பிரிவு அதிகாரிகள், அம்பகஸ்டோவ காவல்துறையினர் மற்றும் உள்ளூர்வாசிகள் இணைந்து நீரில் மூழ்கிய ஆசிரியரைத் தேடும் பணியில் ஈடுபட்ட போதிலும், காணாமல் போன ஆசிரியரை ஞாயிற்றுக்கிழமை (31) இரவு வரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று பொலிஸார்தெரிவித்தனர்.
அப்பகுதியில் மிகவும் குளிராக இருந்ததாலும், வெளிச்சம் குறைவாக இருந்ததாலும் தேடும் பணி கடினமாக இருந்ததால், ஞாயிற்றுக்கிழமை (31) இரவு உடலைத் தேடும் பணி நிறுத்தப்பட்டதாகவும், காணாமல் போன ஆசிரியரைத் தேடும் பணி இன்று (1) காலை மீண்டும் தொடங்கப்பட்டது. எனினும், மேலதிக தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை.

