ஹிக்கடுவ துப்பாக்கிச்சூடு: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது

45 0

ஹிக்கடுவ, மலவென்ன பகுதியில் வேனில் பயணித்தவர்களை இலக்குவைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பி ஓடிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டதாக ஹிக்கடுவ பொலிஸ் தெரிவித்துள்ளது. வேனின் ஓட்டுநர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தப்பி ஓடிவிட்டார், அவரைக் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்