ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து இஸ்ரேலிய இராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், ஹவுதி அமைப்பின் பிரதமர் அஹ்மத் அல்-ரஹாவி, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹவுதி அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
காசாவில் நடந்து வரும் போருக்கு எதிராக, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அண்மைய நாட்களில் இஸ்ரேல் மீது பல ஏவுகணைகளை வீசி தாக்குதல்களை நடத்தியிருந்தனர். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல், ஏமன் மீது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது.
தலைநகர் சனாவை குறிவைத்து கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹவுதி அமைப்பின் பிரதமர் அஹ்மத் அல்-ரஹாவி மற்றும் சில முக்கிய தலைவர்கள் உயிரிழந்துள்ளதாக ஹவுதி அமைப்பின் அறிவிப்பு மேலும் தெரிவிக்கிறது.
இந்தச் சம்பவம் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலை மேலும் அதிகரித்துள்ளது.

