மனைவியை குத்திக் கொலை செய்த கணவன்

65 0

ஹபராதுவ, அமுகொட்டுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் பிலான, அங்குலுகஹா பகுதியைச் சேர்ந்த 42 வயதானவர் என தெரியவந்துள்ளது.

குடும்ப தகராறு அதிகரித்து கணவரால் குறித்த பெண் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்காக ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.