பிரான்சில் தெருக்களில் தூங்கும் குழந்தைகள்! 2000-ஐ தாண்டிய வீடற்ற சிறார்களின் எண்ணிக்கை!

70 0

பிரான்ஸ் நாட்டில் வீடற்ற குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

2025ம் ஆண்டிற்கான பள்ளிகள் தொடங்கவுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிதியகம் (UNICEF)வியாழக்கிழமை வெளியிட்ட தகவலில், கிட்டத்தட்ட 2000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிரான்ஸில் வீடற்று வீதிகளில் உறங்குவதாக தெரிவித்துள்ளது.

 

பிரான்சின் UNICEF, FAS மற்றும் CAL ஆகியவை வெளியிட்ட புள்ளி விவரத்தில், பிரான்சில் குறைந்தது 2,159 குழந்தைகள் தற்போது வீடற்று இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதில் 503 பேர் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

குழந்தைகளின் இந்த வீடற்ற நிலையில் 2024ம் ஆண்டை விட 6% அதிகரித்து இருப்பதாகவும், 2022 ம் ஆண்டை விட 30% அதிகரித்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பிரான்சின் UNICEF தலைவர் அடலின் ஹசன், அதிகரித்து வரும் குழந்தைகளின் வீடற்ற நிலைக்கு தனது கண்டனங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

பிரான்சில் தெருக்களில் தூங்கும் குழந்தைகள்! 2000-ஐ தாண்டிய வீடற்ற சிறார்களின் எண்ணிக்கை! | Child Homelessness Rises In France Shocking Un Rep

அத்துடன் இந்த நிலைமையை சரி செய்ய முடியும் என்றும், ஆனால் அரசு இதில் உறுதிப்பாட்டுடன் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், வீடற்ற குழந்தைகளின் வாழ்க்கையை பாதுகாக்க அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தையும் அடலின் ஹசன் சுட்டிக்காட்டியுள்ளார்.