தமிழக முதல்வரிடம் வாழ்த்து பெற்ற சாதனையாளரான வைத்தியர் ஆதி ஜோதி பாபு

66 0
image

இந்திய மருத்துவ வரலாற்றில் முதன்முறையாக மருந்தில்லா மருத்துவ கண்டுபிடிப்பிற்கான செயல்முறை காப்புரிமை சான்றிதழை பெற்ற வைத்தியர் ஆதி ஜோதி பாபு –  தனது சாதனைக்காக தமிழக முதல்வரை சந்தித்து அவரின் வாழ்த்தைப் பெற்றார்.

வைத்திய நிபுணர் ஆதி ஜோதி பாபு தனது அரிய மருந்தில்லா மருத்துவ கண்டுபிடிப்பான பஞ்சபூத மருத்துவத்திற்காக இந்திய வரலாற்றில் முதல் முறையாக இந்திய அரசாங்கத்தின் சார்பில் செயல்முறை காப்புரிமை சான்றிதழை பெற்றார். அத்துடன் உலக சாதனை சங்கத்தால் வழங்கப்படும் உலக சாதனைக்கான சான்றிதழையும் இவர் பெற்றிருக்கிறார்.

அத்துடன் மட்டும் இல்லாமல் தனது கண்டுபிடிப்பு தொடர்பாக தமிழில் ‘நோய் அறி- நலம் பெறு’ என்ற நூலினையும், ஆங்கிலத்தில் ‘நோ டிசிஸ் – நோ டிசிஸ்’ ( Know Disease – No Disease) என்ற புத்தகத்தையும் எழுதி இருக்கிறார்.

இவரது மருத்துவ கண்டுபிடிப்பை ஊக்குவிக்கும் வகையில் மற்றும் சாதனைக்காக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை தலைமை செயலகத்தில் டொக்டர் ஆதி ஜோதி பாபு சந்தித்தார்.

அதன் போது முதலமைச்சரிடம் கிராமந்தோறும் இல்லம் தேடி மருத்துவம் என்ற தமிழக அரசின் மக்கள் நலத்திட்டத்தில் தனது கண்டுபிடிப்பான மருந்தில்லா மருத்துவத்தையும் இணைக்குமாறு கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சருடன் பேசி ஆவணச் செய்வதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வைத்திய நிபுணர் ஆதி ஜோதி பாபுவிடம் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.