தமிழகத்தின், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ளது உலகப்பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம். இந்த ஆலயத்தில், ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டின் திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக.29) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது.
இதையொட்டி, வண்ண விளக்குகளின் அலங்காரத்தில் ஜொலிக்கும் அன்னையின் ஆலயம்.




