பண்டாரகம, போல்கொட பாலத்திற்கு அருகில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாணந்துறை, மொடராவில பகுதியில் நேற்று வியாழக்கிழமை (28) இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பாணந்துறையைச் சேர்ந்த 18 மற்றும் 21 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 21 ஆம் திகதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் பாணந்துறையைச் சேர்ந்த லலித் குமார கோடகொட ஆவார்.
துப்பாக்கிச் சூடு நடத்த வந்த மோட்டார் சைக்கிள் என சந்தேகிக்கப்படும் போலி எண் தகடுகளைக் கொண்ட மோட்டார் சைக்கிள், போலி கடவுச் சீட்டு, காப்பீட்டுச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் மற்றும் ஒரு ஜோடி போலி எண் தகடுகள் என்பன சந்தேக நபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், இந்த சம்பவம் குறித்து பண்டாரகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

